INR 899


Course duration
20 week(s)
Request Information

 

தமிழ்நாடு அரசுத்தேர்வாணையம் -  ஜெயிலர் பணியிடங்கள்.

( Tamil Nadu Public Service Commission (TNPSC) -  Jailor Posts

  •          காவல்துறைப் பணியைப் போன்று சிறைத்துறைப் பணியும் சீருடைப் பணியாக கருதப்படுகிறது.
  •          தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 மகளிர் சிறப்பு சிறைகள், 95 கிளை சிறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகள் உள்ளன.
  •          இதில், வார்டர் கிரேடு-2, வார்டர் கிரேடு-1, தலைமை வார்டர், உதவி ஜெயிலர் (உதவி சிறை அதிகாரி), துணை ஜெயிலர், ஜெயிலர், கூடுதல் கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், டிஐஜி என பல்வேறு நிலைகளில் ஊழியர்களும் அலுவலர்களும் பணியாற்றி வருகிறார்கள்.
  •          சிறைத்துறை நிர்வாக பிரிவில் ஆரம்ப நிலை பதவியான உதவி சிறை அதிகாரி (அசிஸ்டென்ட் ஜெயிலர்) பணியிடங்கள் (நேரடி நியமனம்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகின்றன. 

தகுதி அடிப்படையில் 

  •          ஜெயிலர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்துவந்த நிலையில், தற்போது அப்பணியில் காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  •          ஜெயிலர் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.
  •          ஜெயிலர் பணிக்கு குறிப்பிட்ட சில உடற்தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

தயாராவது எப்படி? 

  •          ஜெயிலர் பணிக்கு நல்ல கண் பார்வை அவசியம். தகுதியுள்ள நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தலா 300 மதிப்பெண். 

Click here to check the subject topic

Subjects
  • Tamil Or English
  • Chemistry
  • Physics
  • Botany
  • Zoology
  • Geography
  • History
  • Indian Constitution
  • Indian Economic